சிதிலமடைந்த ரயில்வே சுரங்கப் பாதை : தண்ணீர் சூழ்ந்துள்ளதால் 10 கிராம மக்கள் அவதி
சேலம் அருகே கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக கிடக்கும் ரயில்வே தரை பாலத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான வழித்தடமாக உள்ளது கொண்டாலம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தரைப் பாலம். இந்தப் பாலத்தின் கீழ் உள்ள பகுதி, கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது. அவ்வழியாக செல்வோர் கீழே விழுந்து எழாமல் செல்வது சாகசம் என்கின்றனர் வாகன ஓட்டிகள். மாணவர்களின் சீருடை தூய்மை, பாலத்துக்கு முன்பு வரை மட்டுமே. சைக்கிளில் செல்வோர் காயம் அடையாமல், பாலத்தை தாண்ட முடியாது.
கற்கள் பெயர்ந்து, கரடு முரடாக இருக்கும் பாதையின் தன்மை தெரியாதவாறு, தண்ணீரும் சூழ்ந்துள்ளதால், தண்டவாளம் வழியே மாணவர்கள், முதியோர், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
வேறு வழியில்லை என புத்தூர், பெருமாபட்டி, நெய்க்காரப்பட்டி, பெரியநகர், சிவதாபுரம், மலங்காடு, உத்தமசோழபுரம் கிராமங்களை சேர்ந்தவர்கள், 5 கிலோ மீட்டர் சுற்றிவருவதற்கு இது பரவாயில்லை என்பதோடு, யார் மாற்றுவார் இந்த துயரை என வேதனை தெரிவித்துள்ளனர்.
Next Story