"வெள்ளரி அம்மன் கோவில் : பாம்பை வைத்து சர்ப்ப சாந்தி பூஜை"
சமூகவலை தளத்தில் வைரலாகும் வீடியோ
காஞ்சிபுரத்தில், பாம்பை வைத்து பெண் ஒருவர் சர்ப்ப சாந்தி என்னும் நாக பூஜை செய்யும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் இந்த காட்சி திரைப்படங்களில் வரும் காட்சி அல்ல. பெண் சாமியார் ஒருவர், நல்ல பாம்போடு அம்மன் போன்று வேடமிட்டு, மக்களுக்கு அருள் வாக்கு சொல்லும் அவதார நிலை தான் இது.
இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி வரும் நிலையில், இந்த பாம்பு திரைப்படங்களில் நடிக்க பயன்படுத்தும் பாம்பு என்று விமர்சனங்கள் எழுந்தன. உண்மையில் அந்த பாம்பு திரைப்படத்தில் நடிக்கும் பாம்பா...? என்ன நடந்தது காஞ்சிபுரத்தில். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கபிலா அம்மையார். பட்டதாரியான இவர், கடந்த 2 ஆயிரம் ஆண்டு முதல், வட பத்ரகாளி அம்மனுக்கு கோவில் கட்டி, அருள்வாக்கு சொல்லி வருகிறார்.
செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் மட்டும் அருள்வாக்கு சொல்லி வரும் அவரிடம் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் அருள் வாக்கு கேட்டு செல்கின்றனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் நல்ல பாம்புகளை வைத்து சர்ப்ப சாந்தி என்னும் நாக பூஜை செய்துள்ளார்.
இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சாமியார் கபிலா அம்மையார், பயன்படுத்தியது திரைப்படங்களில் நடிக்க பயன்படுத்தி வரும் பாம்பு என விமர்சனங்கள் எழுந்தன. பாம்பு என்றால் படையே நடுங்கும், ஆனால் இவர் எப்படி என பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சினிமா பாம்பை வைத்து மக்களை ஏமாற்றுகிறார் என குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தன் மீது வீண்பழி சுமத்தி, சிலர் அவதூறாக கருத்துக்களை பரப்பு வருவதாக, சாமியார் கபிலா அம்மையார் தெரிவித்துள்ளார்.
Next Story