ஊரக உள்ளாட்சி தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநிலம் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவியிடங்களுக்கு, 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
அதில் 3 ஆயிரத்து 643 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 48 ஆயிரத்து 891 வேட்பாளர்கள், வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 18 ஆயிரத்து 570 பதவிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் இறுதிப்போட்டியில் தேர்தல் களத்தில் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில், 18 ஆயிரத்து 137 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இறுதி போட்டியில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 898 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவியிடங்களுக்கான தேர்தலில், 410 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்,35 ஆயிரத்து 611 பேர் களத்தில் உள்ளனர்.
5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கான தேர்தலில் 23 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 5 ஆயிரத்து 67 பதவியிடங்களுக்கு 22 ஆயிரத்து 776 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதேபோல், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு 2 ஆயிரத்து 605 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story