"அங்கீகாரம் இல்லாமல் எம்-சாண்ட் தயாரிப்பு : சட்டப்படி நடவடிக்கை" - தமிழக அரசு எச்சரிக்கை

அனுமதியின்றி எம்- சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
அங்கீகாரம் இல்லாமல் எம்-சாண்ட் தயாரிப்பு : சட்டப்படி நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
x
எம்-சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தரச்சான்று அளித்து வருகின்றன. இந்த நிலையில் அங்கீகாரம் இல்லாமல் தரமற்ற எம்-சாண்ட் மணலை பலர் தயாரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழகத்தில், எம் சாண்ட்  தயாரிக்க, 216 நிறுவனங்களுக்கு மட்டுமே தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.  பொதுப்பணித்துறையிடம் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் மட்டும் எம்.சாண்ட் வாங்கி உபயோகப்படுத்துமாறும் பொதுமக்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல அரசிடம் உரிய அனுமதி பெறாமல் எம்.சாண்ட் தயாரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்