"சென்னையில் ஆட்சியரின் பங்கு குறைந்த அளவில் தான் உள்ளது" - சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி
மற்ற மாவட்டங்களை போல் சென்னையில் ஆட்சியரின் பங்கு பெரிய அளவில் இருப்பதில்லை என ஆட்சியர் சீதாலட்சுமி கூறியுள்ளார்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர்களாக இருப்பவர்களிடம் புகார் ஏதேனும் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை என கூறினர். இதற்கு பதில் அளித்து பேசிய சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி, மற்ற மாவட்டங்களில் ஆட்சியரின் கீழ் அனைத்து துறைகளும் வந்து விடும் எனவும் ஆனால் சென்னையில் அரசு துறைகளின் தலைமை அலுவலகங்கள் இருப்பதால், ஆட்சியரின் பங்களிப்பு குறைந்த அளவில் தான் இருக்கும் எனவும் கூறினார். எனினும் எச்ஐவி பாதித்தவர்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்கவும், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Next Story