"அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு - சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு"
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில், பல்கலை கழகத்தை பிரிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பல்கலைக்கழகமானது மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு என தனியாக ஒரு அண்ணா பல்கலைக்கழகம் துவங்கப்படும்.
Next Story