சிலைக்கடத்தல் வழக்கு : சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சிலைக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், புராதன மற்றும் கலை பொக்கிஷங்கள் பாதுகாப்பு சட்டத்தின் படி, சிலைக்கடத்தலில் ஈடுபடுவோருக்கு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும், அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதற்கு ஏற்ப சட்டத்திருத்தம் கொண்டு வர, மத்திய அரசுக்கு உத்தரவிட அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா
ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக மத்திய அரசு பிப்ரவரி 5 ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
Next Story