"மெரினாவில் ரூ.27.4 கோடியில் 900 வண்டிக்கடைகள்"

சென்னை மெரினா கடற்கரையில் 27 கோடி ரூபாய் செலவில் 900 வண்டிக்கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மெரினாவில் ரூ.27.4 கோடியில் 900 வண்டிக்கடைகள்
x
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

* அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மெரினா கடற்கரையில் தற்போது வரை ஆயிரத்து 962 கடைகள் உள்ளதாகவும், 

* தற்போது, அங்கு 900 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்க இருப்பதாகவும், அதற்காக, 27 கோடியே 4 லட்ச ரூபாய் செலவில், 900 வண்டிக்கடைகள் அமைத்துக் கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மெரினாவை சுத்தப்படுத்த 175 துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், 6 இடங்களில் நவீன கழிப்பிட வசதிகள் ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

* கலங்கரை விளக்கம் அருகில் மீன் வியாபாரிகளுக்கு 66 லட்சம் ரூபாய் செலவில் 300 மீன் விற்பனை கடைகள் அமைக்கப்படுவதாகவும் அதில் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

* இதை பதிவு செய்த நீதிபதிகள்,  உணவு பாதுகாப்பு விதிகளை மீறி செயல்படுபவர்கள், உணவு விற்பனைக்கான தர சான்று பெறாதவர்கள் மெரினாவில் கடைகள் நடத்த அனுமதிக்கவே கூடாது என எச்சரித்தனர்.

* மேலும், மெரினாவில் 900 கடைகள் அமைப்பதற்காக எடுத்த முடிவுகள் உள்ளிட்டவை குறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்கி, விசாரணையை ஜனவரி 8 ஆ ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்