"சிறந்த கிராமமாக தேர்வு செய்யப்பட்ட மொழுகம்பூண்டி" - அடிப்படை வசதி இல்லை என கிராம மக்கள் புகார்

மத்திய அரசு திட்டங்களை சிறப்பாக செய​ல் படுத்தியதற்காக அரசால் தேர்வு செய்யப்பட்ட தங்கள் கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
x
மத்திய அரசின் மிஷன் அந்தியோதயா திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டதற்காக, திருவண்ணாமலை மாவட்டம்  மொழுகம்பூண்டி கிராமம் முதலிடம் பிடித்துள்ளது. சாலை பராமரிப்பு, குடிநீர், மின்சாரம் கழிப்பிடம்,  குடியிருப்பு மேம்பாட்டு வசதி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு  வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் மொழுகம்பூண்டி கிராமம் நாட்டில்  முதலிடத்திலும், குஜராத் மாநிலத்தில் உள்ள பாம்பானியா கிராம பஞ்சாயத்து இரண்டாம் இடத்திலும் உள்ளது.  

இதனிடையே நாட்டிலேயே சிறந்த கிராமமாக மத்திய அரசு தேர்வு செய்யும் அளவுக்கு எங்கள் கிராமத்தில் எந்த வசதியும் இல்லை என மக்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில் ஆட்சியர் கந்தசாமி மொழுகம்பூண்டி கிராமத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது  கிராம மக்கள் ஆட்சியர் கந்தசாமியிடம் எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதி எதுவும் இல்லை என்று காலில் விழுந்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து  அனைத்து வசதிகளும் செய்து தருவதாக ஆட்சியர் கந்தசாமி கிராம மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்