ஆயிரம் ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு - வரும் 20-ஆம் தேதி முதல் விநியோகம்
ஆயிரம் ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 20-ஆம் தேதி முதல் விநியோகம் செய்ய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆயிரம் ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு, வரும் 20-ஆம் தேதி முதல் விநியோகம் செய்ய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2 கோடியே 5 லட்சம் அரிசி அட்டை தாரர்களுக்கு, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலம், கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க, கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், பொங்கல் பரிசு வழங்க தடையில்லை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், வரும் 20-ம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Next Story