12-வது யானைகள் நலவாழ்வு முகாம் இன்று தொடக்கம்

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் இன்று தொடங்குகிறது.
12-வது யானைகள் நலவாழ்வு முகாம் இன்று தொடக்கம்
x
இதற்காக, மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி கரையோர பகுதியில் 6 ஏக்கரில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 12-வது ஆண்டாக நடைபெறும் இந்த முகாமில், தமிழகம் முழுவதும் இருந்து 28 கோயில் யானைகள் பங்கேற்க உள்ளன. இதற்காக, முகாமில் உணவு தயாரிப்பு கூடம், மருந்தகம், தீவனக்கூடம், யானைகள் குளிப்பதற்கான குளியல் மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. காட்டு யானைகள் நுழைவதை தடுக்க,  முகாமை சுற்றிலும் சோலார் மின்வேலி மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஸ்ரீவல்லிப்புத்தூர் கோவில் யானை ஜெயமால்யதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோயில் யானைகள் லாரி மூலம் முகாமிற்கு அழைத்துவரப்பட்டன. எடை பரிசோதனைக்கு பின் யானைகள், முகாமிற்குள் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அங்கு ஜெயமால்யதா யானை சேற்றில் புரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்