சுற்றுசூழலை பாதுகாக்க குதிரையில் பள்ளிக்கு பயணம்

மணப்பாறை அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக இரண்டு மாணவர்கள் தினமும் பள்ளிக்கு குதிரையில் சென்று வருகின்றனர்.
x
நாட்டில் மோட்டார் வாகனப் பயன்பாடு அதிகரிப்பால் குதிரை சவாரி, குதிரை வண்டிகளின் பயன்பாடு அரிதாகிவிட்டது. இத்தகைய சூழலில் அழிவின் விளம்பில் உள்ள நாட்டு இன குதிரைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மணப்பாறை அடுத்த தேனூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன். தனியார் வங்கி ஒன்றின் கிளை மேலாளராக பணியாற்றும் இவர் விலங்குகள் மீதும் தீராத காதல் கொண்டவர். விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் பாலசுப்பிரமணியன், நாட்டு இன குதிரைகளையும் வளர்த்து வருகிறார். இவரின் அறிவுரையால் கவர்ந்திழுக்கப்பட்ட  அழகர்சாமி, வேலு ஆகிய இரு மாணவர்கள் தினமும் குதிரையில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். 

குதிரைகள் குறைந்த அளவே உயரம் கொண்டதால் மாணவர்கள் எளிதில் அமர்ந்து செல்ல முடிகிறது. அரிதான குதிரை பயணம் மீட்டெடுக்கப்பட்டால், வாகன புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த முடியும் என விவசாயி பாலசுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவிக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்