உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய மனு - தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தாக்கல்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனு நாளை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய மனு - தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தாக்கல்
x
ஊரக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்  சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தி.மு.க. சார்பில் மூத்த வழக்கறிஞர்  அபிஷேக் மனு சிங்வி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனுவை தாக்கல் செய்தார்.  1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி விதிகளின்படி அனைத்து நிலைகளிலும் விகிதாச்சார இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய  பின்பு உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பை  வெளியிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்