உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பில் பொது சின்னம் வழங்க கோரி மனு
உள்ளாட்சி தேர்தலில் அமமுகவிற்கு பொது சின்னம் வழங்கிட கோரி அமமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மற்றும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர் இந்த மனுவை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன பொது சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் தரப்பில் நாளை பதில் கூறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Next Story