சசிகலாவை விடுதலை செய்ய கோரி தேசிய நெடுஞ்சாலையில் வீச்சரிவாள் - கோடாரியுடன் ரகளை செய்த இளைஞர்

கரூர் அருகே இளைஞர் ஒருவர், வீச்சரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
x
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில், இளைஞர் ஒருவர் திடீரென வீச்சரிவாள் மற்றும் கோடாரியுடன் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ரகளையில் ஈடுபட்டார்.  சசிகலாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூச்சலிட்ட அவர், அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் , அந்த நபரின் சகோதரர் அங்கு வந்து அவரை அடித்து இழுத்துச் சென்றார். இந்த சம்பவம் காரணமாக திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்