உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை" - ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று, ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.
x
இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில். உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை எனவும் பிரசாரத்திற்காக ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்த கூடாது எனவும் தெரிவித்துள்ளா​ர். ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள  அவர், அப்படி பயன்படுத்தி, வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினியின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்