உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழக உள்ளாட்சி தேர்தலை 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
x
வார்டுகள் மறுவரையறை செய்யப்படாததால், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என தீர்ப்பு அளித்துள்ளது. தேர்தல் நடத்தாத 9 மாவட்டங்களில் அடுத்த 4 மாதங்களுக்குள் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. 
இதன்படி,  நெல்லை, தென்காசி,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது. 


Next Story

மேலும் செய்திகள்