நீலகிரி : சாலையில் இளைப்பாறும் யானைகள் - வாகனங்களை இயக்க ஓட்டுநர்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர்- கோவை சாலையில், இளைப்பாற நிற்கும் காட்டுயானைகளால், வாகன ஓட்டுநர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர்- கோவை சாலையில், இளைப்பாற நிற்கும் காட்டுயானைகளால், வாகன ஓட்டுநர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கெத்தை மலைப்பாதையில் சுமார் 15 நிமிடம் யானைக்கூட்டம் சாலையில் நின்றது. அரசு பேருந்தில் இருந்து தொடர்ந்து ஒலி எழுப்பட்டதை தொடர்ந்து, யானைகள் சற்று ஒதுங்கி நின்றன. இதையடுத்து, அரசு பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4-வது முறையாக யானைகள் பேருந்தை வழிமறித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story