திமுகவில் இணைந்தார் பாஜக மாநில துணைத்தலைவர் அரசகுமார்

பாஜக மாநில துணைத்தலைவராக இருந்த அரசகுமார் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
x
பாஜக மாநில துணைத்தலைவராக இருந்த அரசகுமார் இன்று திமுகவில் இணைந்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அதே திருமணவிழாவில் பங்கேற்ற பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார், மேடையில் பேசுகையில், ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என கூறியதால், பெரும் சர்ச்சை எழுந்த‌து. இந்த நிலையில், இன்று அரசகுமார் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதை தொடர்ந்து அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுயமரியாதை இல்லாத இயக்கம் என்பதால் பாஜகவை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்