காஞ்சிபுரம் : நிலத்தடி நீர்மட்டம் 7 அடி உயர்வு
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் தொடர்மழை காரணமாக 550 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் தொடர்மழை காரணமாக 550 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 968 ஏரிகளில், 184 ஏரிகள் நூறு சதவீதமும், 458 ஏரிகள் 75 சதவீதமும், 298 ஏரிகள் 50 சதவீதமும், 28 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் நடைபெற்ற ஆய்வின்படி, நிலத்தடி நீர்மட்டம், 7 அடி உயர்ந்துள்ளதாக பொதுப் பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story