அடிப்படை கல்வி அறிவு இல்லாத கைதிகள் - 10 சிறைகளில் 776 பேருக்கு கல்வி வகுப்பு
அடிப்படை கல்வி அறிவு இல்லாத 109 பெண் கைதிகள் உள்பட 776 சிறைவாசிகளுக்கு, சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
முறைசாரா கல்வி இயக்குனரகமும், சிறைத்துறையும் இணைந்து, இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. சென்னை புழல், வேலுார், கோவை, மதுரை, திருச்சி, சேலம், பாளையங்கோட்டை, கடலுார் உள்பட 10 சிறைகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம், அந்தந்த சிறை வளாகங்களுக்குள் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எழுத, படிக்க, அடிப்படை கணக்கு ஆகியன குறித்து கைதிகளுக்கு கற்றுத் தரப்படுகிறது. கல்வி மற்றும் சிறைத்துறையின் இந்த முயற்சிக்கு சிறைவாசிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story