கரூர் : காகித ஆலை துணைமின் நிலையத்தில் தீ
கரூர் மாவட்டம் புகழூரில் துணை மின் நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் புகழூரில் துணை மின் நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. 1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு காகித ஆலை நிர்வாகமே, மின் உற்பத்தி செய்து வருகிறது. 230 கிலோ வோல்ட் மின்சாரம் உற்பத்தியாகும் நிலையில், ஆலை பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரம் அரசுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக உருவாக்கப்பட்ட துணை மின்நிலைய மின்மாற்றியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த கரூர் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் தீ பரவாமல் தடுப்பது மற்றும் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட்டார்.
Next Story