உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் - டிச.5ஆம் தேதி விசாரணை
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் வருகிற 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
தொகுதி மற்றும் மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என தி.மு.க உச்சநீதிமன்றத்தில் புது வழக்கு தொடர்ந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி 8 வாக்காளர்கள் சார்பிலும் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய தினம் இந்த மனுக்களை அவசர வழக்காக எடுத்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க தரப்பு முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வருகிற 5ஆம் தேதி தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் என்றார். உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா, அல்லது தொகுதி மறுவரையறை நிறைவடையும் வரை தள்ளி வைக்கப்படுமா என்பது நாளை மறுதினம் தெரியவரும்.
Next Story