ஜாமீன் கோரி 2-வது முறையாக தீட்சிதர் மனுத்தாக்கல் : காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில், முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் 2-வது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில், முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் 2-வது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கோவில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டுமென தகராறு செய்ததாகவும், தன்னை நோக்கி கையை தூக்கியதால், தற்காப்புக்காக தள்ளி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கெதிராக போலீசார் பொய் வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளர். எனவே, இது தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story