நெல்லை: கடனாநதி, இராமநதி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு
தென்காசி மாவட்டம் கடனாநதி, இராமநதி அணையில் இருந்து பிசானபருவ சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடனாநதி, இராமநதி அணையில் இருந்து பிசானபருவ சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் கடந்த ஒரு மாதத்தில் கடனாநதி, ராமநதி அணைகள் இரண்டு முறை நிரம்பின. இதனையடுத்து, நவம்பர் 26 ஆம் தேதி முதல், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி வரை, நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தவிட்டிருந்தார். அதன் படி, இராமநதி அணையின் உதவி செயற்பொறியாளர்கள் கணபதி மற்றும் முருகேசன் ஆகியோர் தண்ணீரை திறந்தனர். இந்த அணையின் மூலம் சுமார் 4 ஆயிரத்து 365 ஏக்கர் விவசாய நிலங்களும் இரு அணைகளும் சேர்ந்து சுமார் 9 ஆயிரத்து 795 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story