திருமணம் செய்வதாக மோசடி செய்து கொலை - காதலி மற்றும் நண்பர்களுடன் கொலை செய்தவன் கைது
நெல்லையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு கொலையான பெண்ணின் எலும்புத் துண்டுகளை கைப்பற்றிய போலீசார், மரபணு சோதனை செய்ய உள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த புஷ்பா என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரை திருமணம் செய்வதாக கூறி 20 சவரன் நகைகளை பறித்த கள்ளக் காதலன் சிவகுமார், புஷ்பாவை கொலை செய்து தச்சநல்லூர் அடுத்த நயினார் குளத்தின் கரையில் புதைத்துவிட்டு மும்பை சென்றுள்ளார். இதற்கு அவரது காதலி மற்றும் நண்பர்களான ஆசீர்செல்வம், தியாகு ஆகியோர் உதவியுள்ளனர். தற்போது, அடிதடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ஆசீர்செல்வம் அளித்த தகவலின்படி, மும்பை சென்ற போலீசார், சிவகுமாரை அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொலையான புஷ்பாவை புதைத்த இடத்தில் இருந்து சிதைந்த எலும்புகள் கைப்பற்றப்பட்டது. இதனிடையே, புஷ்பாவின் தந்தை மூலம் டி.என்.ஏ. பறிசோதனை செய்ய போலீசார் முயற்சித்து வருகின்றனர். இதில், கொலைக்கு உடந்தையாக இருந்த சிவகுமாரின் காதலி உமா, நண்பர் தியாகு ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Next Story