பால் மாதிரிகளில் அதிக நச்சுத்தன்மை : அப்லாடாக்சின் எம்1 என்றால் என்ன?

தமிழகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட பால் மாதிரிகளில், 'அப்லாடாக்சின் எம்-1' என்ற ரசாயனம் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
பால் மாதிரிகளில் அதிக நச்சுத்தன்மை : அப்லாடாக்சின் எம்1  என்றால் என்ன?
x
தமிழகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட பால் மாதிரிகளில், 'அப்லாடாக்சின் எம்-1' என்ற ரசாயனம் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. 'அப்லாடாக்சின் எம்-1' என்பது மாடுகளுக்கு கொடுக்கப்படும் தீவனங்களில் கலந்திருக்கும் ஒரு வகையான வேதிப்பொருள். இது மாடுகளுக்கு கொடுக்கப்படும் சோளத்தட்டை, கடலை, பருத்தி உள்ளிட்ட தீவனப் பொருட்களில் இருந்து உற்பத்தியாகிறது. இதனை சாப்பிடும் மாடுகளின் உடலுக்குள் இந்த வேதிப் பொருளானது சென்று, பின்னர் அது கொடுக்கும் பாலிலும் வெளிப்படுகிறது. இந்த அப்லாடாக்சின் எம்1 என்பது பாலில் கலந்திருப்பதால் அதனை குடிப்பவர்களுக்கும் ஆபத்துகள் அதிகமிருப்பதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக குமட்டல், வயிற்று வலி தொடங்கி வலிப்பு நோய் வரை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்