டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது தாக்குதல் : சட்ட விரோதமாக பார் நடத்தியதை தட்டிக் கேட்டதால் தாக்குதல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், சட்டவிரோதமாக டாஸ்மாக் பார் நடத்துவதை தட்டிக்கேட்ட, டாஸ்மாக் மேற்பார்வையாளர் சரமாரி தாக்கப்பட்டார்.
டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது தாக்குதல் : சட்ட விரோதமாக பார் நடத்தியதை தட்டிக் கேட்டதால் தாக்குதல்
x
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், சட்டவிரோதமாக டாஸ்மாக் பார் நடத்துவதை தட்டிக்கேட்ட, டாஸ்மாக் மேற்பார்வையாளர் சரமாரி தாக்கப்பட்டார். காமன்கோவில் தெருவை சேர்ந்த மணிவேல்,அங்குள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணி புரிகிறார். இவரது கடைக்கு அருகே, சட்டவிரோதமாக செல்வம் என்பவர் பார் நடத்தி வந்துள்ளார். இதை தட்டிக்கேட்டபோது,  செல்வம் தனது,  ஆதரவாளர்களுடன் சேர்ந்து, மணிவேலை தாக்கியதாக கூறப்படுகிறது. தலையில் காயம்  அடைந்த மணிவேல்,  தாராபுரம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்