எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலை வைக்க தடை கோரிய வழக்கு - 2 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
திருத்தணியில் பொது சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலை வைப்பதற்கு தடை கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருத்தணியில் பொது சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலை வைப்பதற்கு தடை கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனு விசாரணைக்கு வந்தபோது, சிலை வைக்கப்பட உள்ள இடம் பொது சாலையா என்பதை கண்டறிய அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Next Story