பெண் பக்தரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி கும்பிட வந்த பெண்ணை தாக்கிய தீட்சிதரை 2 மாதங்கள் சஸ்பெண்ட் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி கும்பிட வந்த பெண்ணை தாக்கிய தீட்சிதரை 2 மாதங்கள் சஸ்பெண்ட் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி கும்பிட வந்த பெண்ணை தர்ஷன் என்ற தீட்சிதர் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவில் தீட்சிதர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தீட்சிதர் தர்ஷனை 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
Next Story