முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் : மேயர் நகர சபை தலைவர்கள் தேர்வு குறித்து ஆலோசனை
உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர் மற்றும் நகர சபை தலைவர்களை தேர்வு செய்யும் நடைமுறை குறித்து இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று செவ்வாய்கிழமை நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான முடிவுகளும் எடுக்க உள்ளதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மக்களே தேர்வு செய்வதற்கு பதிலாக வார்டு உறுப்பினர்கள் மூலம் மேயர்கள் மற்றும் நகராட்சி பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என அதிமுக மூத்த தலைவர்கள் விரும்புவதாக தெரிகிறது. இது குறித்து முடிவெடுக்கப்பட்டு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Next Story