"தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நம்ப மக்கள் தயாராக இல்லை" - அன்புமணி
அதிமுக கூட்டணிக்கு இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணிக்கு இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த தண்டலத்தில் நடைபெற்ற பாமக நிகழ்ச்சியில் அவர் இளைஞர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிடும் என்று கூறினார். திமுக தலைவர் ஸ்டாலினை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றும் அன்புமணி தெரிவித்தார்.
Next Story