கரூர் : தொழிலதிபர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
கரூர் தொழிலதிபர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இரவிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.
கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், சிவகாமியின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 15 கார்களில் வந்த 50-க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 2வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொழில் அதிபர் சிவசாமி வீட்டில் வருமானவரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 32 கோடி ரூபாய், வருமான வரித் துறையினரிடம் சிக்கியதாகவும் மேலும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Next Story