பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தவர்கள் கைது : தப்பி ஓடிய 6 பேருக்கு வலை வீச்சு
திருச்செந்தூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்
ஆத்தூருக்கு உட்பட்ட பழைய ஏற்பாட்டு பகுதியில் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் . அங்கு பயங்கர ஆயுதங்களுடன் 9 பேர் பதுங்கி இருந்தனர். இதனையடுத்து காளி, முனீஸ்வரன், அதிபன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். எஞ்சிய 6 பேர், அங்கிருந்து தப்பி ஓடினர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஆத்தூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணத்தை கொள்ளைடிக்க சதி திட்டம் தீட்டி பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டது இது கும்பல் என்பது விசாரணையில் தெரியவந்தது. தற்போது ஜாமினில் வந்தவர்கள் மீண்டும் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
Next Story