சென்னை : உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு நடை பயணம்
உலக நீரிழிவு தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது.
உலக நீரிழிவு தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது. ஆயுஷ்பதி, ஆயுசா, சென்னை சில்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த நடை பயணத்தில் மாணவர்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நடை பயணம் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் அலெக்சாண்டர், உலக நீரிழிவு சுமையில், இந்தியாவின் பங்களிப்பு 49 சதவீதமாக உள்ளதாகவும், இதற்கு ஒருங்கிணைந்த மருத்துவம் மூலம், புதிய சிகிச்சை முறை கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story