அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனு : மனுக்களை வாபஸ் பெற்றார் விஜயகாந்த்

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுக்களை விஜயகாந்த் வாபஸ் பெற்ற நிலையில் வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனு : மனுக்களை வாபஸ் பெற்றார் விஜயகாந்த்
x
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுக்களை விஜயகாந்த் வாபஸ் பெற்ற நிலையில் வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தேமுதிக  பொதுச்செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் வாபஸ் பெற்றனர். பல வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 29 மனுக்களையும் திரும்பப் பெற அனுமதி கோரி  விஜயகாந்த் உள்ளிட்டோர் தரப்பில் நீதிபதிகளிடம் தனித்தனியாக முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்த நீதிபதிகள், அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 



Next Story

மேலும் செய்திகள்