"நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வரும் வட்டங்கள்" - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் எல்லையை வரையறுத்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வரும் வட்டங்கள் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
x
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் எல்லையை வரையறுத்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் மற்றும் திசையன் விளை ஆகிய வட்டங்களை  உள்ளடக்கிய திருநெல்வேலி மற்றும் சேரன்மகாதேவி வருவாய் கோட்டங்கள் நெல்லை மாவட்டம் ஆட்சியர் கீழ்வரும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில், தென்காசி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள வருவாய் கோட்டமான சங்கரன்கோவில் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே புதூர், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட 8 வட்டங்கள் தென்காசி மாவட்ட வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

தென்காசி தாலுகா மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.  தென்காசி வருவாய் கோட்டத்துடன், கடையம் பகுதியை சேர்ந்த 12 கிராமங்கள், ஆழ்வார்குறிச்சியில் உள்ள 13 கிராமங்கள், கல்லூரணியை சுற்றியுள்ள11 கிராமங்கள் , தென்காசி பகுதியை சேர்ந்த 11 கிராமங்கள்  தென்காசி வருவாய் கோட்டத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்துடன்  இணைக்கப்பட்ட சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில், சங்கரன்கோவிலில் உள்ள 6 கிராமங்கள் , குருக்கள் பட்டி அருகில் உள்ள  9 கிராமங்கள் ,சேர்ந்தமங்கலத்தை சுற்றியுள்ள 5 கிராமங்கள் ,கரிவலம்வந்தநல்லூர்  பகுதியில் உள்ள 9 கிராமங்கள், வீரசிகாமணி சுற்றியுள்ள 6 கிராமங்கள்  என 35 வருவாய் கிராமங்களுடன் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் செயல்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. வன்னிகோனந்தேல் பிர்கா, சங்கரன்கோவில் தாலுகாவில் இருந்து பிரிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட பகுதிகளுக்கான செயல்பாடுகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் தென்காசி மாவட்ட சிறப்பு அதிகாரி ஆகியோர் உடனடியாக மேற்கொள்ளவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்