எட்டு இடங்களில் சிறப்பு குறைதீர் கூட்டம் - மனுக்களை பெற்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்
உள்ளாட்சி தேர்தலிலும், தமிழக மக்கள், அ.தி.மு.க-வுக்கு அங்கீகாரம் அளிப்பார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில், எட்டு இடங்களில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து, இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றார். மேலும், உள்ளாட்சி தேர்தலிலும், தமிழக மக்கள், அ.தி.மு.க-வுக்கு அங்கீகாரம் அளிப்பார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Next Story