"நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி நியமனத்திற்கு எதிர்ப்பு" - இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகர் சங்க நிர்வாக பணிகளை கவனிக்க அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி, அரசின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Next Story