சிறப்பு முகாமில் அகதிகள் தற்கொலை முயற்சி?:சம்பவம் குறித்து சிறப்பு துணை தாசில்தார் விசாரணை
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இருந்த அகதிகளில் சிலர் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் பாஸ்போர்ட் இன்றி தங்கியிருத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 72 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தண்டனை காலம் முடிந்தும், சொந்த நாட்டிற்கு அனுப்பவில்லை எனக்கூறி, நேற்று முதல், இலங்கை, வங்கதேசம், பல்கேரியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த 46 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 2ஆம் நாளான இன்று, அவர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறப்பு துணை தாசில்தார் சுந்தரராஜன் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story