"உரம் இருப்பு மற்றும் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம்"

மத்திய அரசு சார்பில் 20 ஆயிரம் டன் யூரியா ஒதுக்கீடு
உரம் இருப்பு மற்றும் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம்
x
தமிழகத்தின் உரத் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு,  20 ஆயிரம் டன் யூரியா  ஒதுக்கீடு செய்துள்ளதாக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறினார். சென்னை எழிலகத்தில் உரம் இருப்பு மற்றும் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகளுக்கு தேவையான உரம், தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.  காமராஜர்  துறைமுகத்தில் இருப்பில் உள்ள 20 ஆயிரம் டன் உரத்தினை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அடுத்த வாரத்தில் 37 ஆயிரம் டன் யூரியா காரைக்கால் துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்