ஏரிகளை ஆழப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்துவதற்கு, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* பருவமழையும், நிலத்தடி நீரையும் மட்டுமே நம்பியுள்ள சென்னை நகர மக்கள், 2003- 2004 ஆம் ஆண்டு முதல் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர்.
* இந்த பற்றாக்குறையை தவிர்க்க நவீன நீர் சேகரிப்பு முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்
* சென்னையில் உள்ள செம்பரபாக்கம், புழல் உள்பட 12 ஏரிகளை 10 அடி அளவுக்கு ஆழப்படுத்தி , நீர் கொள்ளளவை அதிகரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.
* ஏரிகளில் நீர் பிடிப்பை அதிகரிக்க மேற்கொள்ளபட்ட திட்டங்கள் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
* இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
Next Story