ஈரோட்டில் களைகட்டும் ஆமை விற்பனை : சட்டவிரோதமான தொழிலில் ஈடுபடும் கும்பல்
ஈரோட்டில் சட்டவிரோதமாக ஆமைகளை வளர்த்து விற்பனை செய்யும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள வசந்தம் நகரில் அரசுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. காவிரியாற்று படுகையில் இருந்து அரியவகை ஆமைக்குஞ்சுகளை பிடித்து வரும் சிலர் இந்த குளத்தில் விட்டு வளர்த்து வருகின்றனர். சட்டவிரோதமான முறையில் ஆமைக்குஞ்சுகளை வளர்த்து அதனை இறைச்சிக்காக விற்பனை செய்து வருகின்றனர். கருப்பு நிற ஆமை 100 ரூபாய்க்கும், வெண்கல நிற ஆமை 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால் உணவுப் பிரியர்கள் இதனை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். அதேநேரம் அரிய வகை ஆமை இனங்கள் அழியும் அபாயம் உள்ளதால் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
Next Story