கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழு:அலட்சியமாக பதில் அளித்த மருத்துவர்கள்
திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் வசித்து வரும் ஒடிசாவை சேர்ந்த தேவி என்பவர் திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வந்துள்ளார். 3 மாதம் கர்ப்பமாக உள்ள அவருக்கு அங்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. அதில் புழுக்களும் பஞ்சு போன்ற துகள்களும் மிதந்ததையடுத்து உறவினர்கள் மருத்துவர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த
மாநகர் சுகாதாரத்துறை அலுவலர் பூபதி அங்கு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Next Story