வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே தகராறு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சாத்துமுறை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே தகராறு
x
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி சாத்துமுறை உற்சவம் நடைபெற்றது. அப்போது  உற்சவ மூர்த்திகள் முன்பு அர்ச்சகர்களில் ஒரு பிரிவினர் பிரபந்தம் பாட முயற்சித்தனர். அப்பொழுது அர்ச்சகர்களில் மற்றொரு பிரிவினர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பிரபந்தங்களை பாடக்கூடாது என வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து  கோவிலுக்கு வந்த போலீசார் இரண்டு தரப்பினரையும் சமாதனப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும் இரு தரப்புக்கும் இடையே 2 மணி நேரத்திற்கு மேல் வாக்குவாதம் நீடித்தது. இதனையடுத்து, பிரபந்தங்களை யாரும் பாட வேண்டாம் என காவல் துறை மற்றும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கேட்டு கொண்ட பிறகும்  இருதரப்பினரும் போட்டிபோட்டுக்கொண்டு  பிரபந்தங்களை ஆவேசமாக பாடி சுவாமிகளை வழிபட்டதால் கோவில் வளாகத்தில் கூச்சல் குழுப்பம் ஏற்பட்டது. பூதத்தாழ்வார் சாத்துமுறை மட்டுமின்றி ஒவ்வொரு ஆழ்வார்களின் சாத்துமுறை உற்சவத்தின் போதும் இதேபோல் பிரச்சினை ஏற்படுவதாக பக்தர்கள் கூறியுள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்