வடகிழக்கு பருவமழை - சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் மாதவரம் பகுதியில் 20 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 14 புள்ளி 5 அடியிலேயே நீர் கிடைக்கிறது. அதாவது 5 புள்ளி 5 அடி அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ராயபுரத்தில் 23 புள்ளி 6 அடியாக இருந்த நீர்மட்டம், தற்போதைய நிலவரப்படி 21 புள்ளி 8 அடியில் நீர் கிடைக்கிறது. வளசரவாக்கத்தில் 21 அடியில் இருந்த நீர்மட்டம், தற்போதைய நிலவரப்படி 15 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது 6 அடி வரை உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அண்ணாநகரில் 19 அடியில் இருந்த நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 13 புள்ளி 4 அடியாக உயர்ந்து உள்ளது. அதாவது 5 புள்ளி 6 அடி வரை உயர்ந்துள்ளது. அடையாறில் 20 புள்ளி 7 அடியியில் இருந்த நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 15 புள்ளி 6 அடியாக உயர்ந்துள்ளது. சோழிங்கநல்லூரில் 14 புள்ளி 8 அடியில் இருந்த நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 13 புள்ளி 1அடியாக உயர்ந்து உள்ளது. அதாவது 1 புள்ளி 7 அடி வரை உயர்ந்துள்ளது. தேனாம்பேட்டையில் 19 புள்ளி 6 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 16 புள்ளி 1 அடியாக உள்ளது. அம்பத்தூரில் 24 புள்ளி 5 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 15 புள்ளி 5 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது வடகிழக்கு பருவ மழைக்குப்பின் கணிசமாக உயர்ந்து வரும் சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 1 புள்ளி 7 அடி முதல் 9 அடி வரை உயர்ந்துள்ளது.
Next Story