முதலமைச்சருடன் பின்லாந்து அமைச்சர் சந்திப்பு: 'கோன்' நிறுவனத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை
பின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்தோ (Pekka Haavisto) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
பின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்தோ (Pekka Haavisto) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார். நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் , மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து இரு நாட்டு நட்புறவு குறித்து பேச உள்ளார். முன்னதாக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த அவர், கோன் நிறுவனத்தை தமிழகத்தில் தொடங்குவது குறித்து ஆலோசித்தார். இந்த நிறுவனம் தானியங்கி படிக்கட்டுகள்,தானியங்கி கதவுகள் , மின் தூக்கிகள் தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story