ராமேஸ்வரம் கோயில் பணம் கையாடல் வழக்கு : சி.பி.சி.ஐ.டி. விசாரணை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ராமேஸ்வரம் கோயில் பணத்தை கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி, உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ராமேஸ்வரம் கோயில் பணம் கையாடல் வழக்கு : சி.பி.சி.ஐ.டி. விசாரணை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
ராமேஸ்வரம் கோயில் பணத்தை கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி, உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், கணினி இயக்குபவராக பணியாற்றி வந்த சிவன் அருள்குமரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கோயில் நிதி 73 லட்சம் ரூபாயை கையாடல் செய்ததாக, தம்மை கைது செய்துள்ளதாகவும், தற்காலிக ஊழியரான தம் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளதாவும் கூறி, ஜாமின் வழங்க கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்