திருச்சி பெல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? : சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை தொடக்கம்
திருச்சி பெல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர், ஏற்கனவே வெறொரு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திருச்சி பெல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர், ஏற்கனவே வெறொரு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 25ஆம் தேதி இரவு, திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஜன்னலை உடைத்து கொள்ளையடிக்க முயன்று தோல்வி அடைந்ததால், கொள்ளையன் திரும்பி சென்றுள்ளார். இந்நிலையில் புதூரில் நடந்த கொள்ளை முயற்சி குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சியை ஆராய்ந்த நிலையில், புதூர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் தான், பெல் வங்கியிலும் கொள்ளையடித்து இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Next Story