குழந்தை உயிரிழப்பு : "முறையான சிகிச்சை அளிக்கவில்லை" - அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

நாகை மாவட்டம் ஆனந்த தாண்டவபுரத்தை சேர்ந்த ராஜேஷ் -சுவிதா தம்பதியின் ஒரு மாதமே ஆன குழந்தைக்கு, உடல்நிலை சரியில்லாததால், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தை உயிரிழப்பு : முறையான சிகிச்சை அளிக்கவில்லை - அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
x
நாகை மாவட்டம் ஆனந்த தாண்டவபுரத்தை சேர்ந்த ராஜேஷ் -சுவிதா தம்பதியின் ஒரு மாதமே ஆன குழந்தைக்கு,  உடல்நிலை சரியில்லாததால், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருந்து செலுத்திய பின், வீட்டிற்கு சென்றவுடன் குழந்தைக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை மயங்கியுள்ளது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்